×
Saravana Stores

76 வது நினைவு தினம் அனுசரிப்பு மகாத்மா காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

 

நாகர்கோவில், ஜன.31: மகாத்மா காந்தியின் 76 வது நினைவு தினத்தையொட்டி நாகர்கோவில், வடசேரி காந்தி பூங்காவில் உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து மாலை அணிவித்தார்.

மாவட்ட பொதுசெயலாளர் தட்சிணாமூர்த்தி, செந்தில்குமார், ரஜினி செல்வம், மாநகர செயலாளர் பூபதி, தவசிமுத்து, மண்டல தலைவர் இளங்கோ, ராஜபாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராணி செல்வின், மாவட்ட துணை செயலாளர் சொர்ணகுமார், இலக்கிய அணி சார்பில் செல்வகுமார், மணி சேகரன், மாவட்ட துணை செயலாளர் கவுன்சிலர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post 76 வது நினைவு தினம் அனுசரிப்பு மகாத்மா காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mahatma Gandhi ,Nagercoil ,Vadaseri Gandhi Park ,Radhakrishnan ,Congress ,
× RELATED கள்ளநோட்டில் அனுபம் கெர் புகைப்படம்