×

திட்டக்குடியில் ரூ.4.6 கோடி செலவில் 17 துணை சுகாதார நிலையம் திறப்பு

 

திட்டக்குடி, ஜன. 31: திட்டக்குடியில் ரூ. 4 கோடியே 60 லட்சம் செலவில் 17 துணை சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் சி.வெ.கணேசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் சுமார் 4 கோடியே 60 லட்சம் செலவில் 17 துணை சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்கான திறப்பு விழா ராமநத்தத்தை அடுத்துள்ள மங்களூர் கிராமத்தில் நடைபெற்றது. அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கினார். எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், மங்களூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சுகுணா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மங்களூரில் ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையத்தையும், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் ஆகியோர் திறந்து வைத்தனர். அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், திட்டக்குடி தொகுதியில் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்தது. திமுக ஆட்சி ஏற்பட்டவுடன் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன. அனைத்து கிராமங்களிலும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது.

தொகுதியில் ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன, என்றார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றனர். காலையில் கூட சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்டேன். மருத்துவத்துறையில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களை தேடி மருத்துவம், மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள், அனைத்து பிரிவுகளிலும் உரிய உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சியில் பல் மடங்கு திட்டங்கள் சுகாதாரத் துறையில் மேம்படுத்தப்பட்டுள்ளன, என்றார். மாவட்ட இணை இயக்குநர் கிரியன் ரவிக்குமார், மாவட்ட துணை இயக்குநர் கீதா, மாவட்ட பொருளாளர் தண்டபாணி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், திட்டக்குடி தொகுதி பொறுப்பாளர் நெய்வேலி ரவி, மங்களூர் ஒன்றிய செயலாளர்கள் செங்குட்டுவன், பட்டூர் அமிர்தலிங்கம், சின்னசாமி, திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திட்டக்குடியில் ரூ.4.6 கோடி செலவில் 17 துணை சுகாதார நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Projectkudi ,Phetakkudi ,Ministers ,C.V.Ganesan ,M.Subramanian ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு