×

அமெரிக்க படைகள் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி: அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இஸ்ரேல் -ஹமாசுக்கு இடையேயான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகின்றது. இதனையடுத்து அமெரிக்க படைகள் மீது அவ்வப்போது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சிரியா எல்லைக்கு அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜோர்டானில் நிறுத்தப்பட்டு இருந்த அமெரிக்க படைகள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் காயமடைந்தனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் அதிகாரப்பூர்வமாக இந்த தாக்குதலை மறுத்துள்ளது. ஆனால் இந்த தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள அல் முகாவாமா அல் இஸ்லாமியா பி அல் ஈராக் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க படைகளுக்கு எதிரான இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

The post அமெரிக்க படைகள் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி: அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : President Joe Biden ,Washington ,US ,America ,Israel ,Hamas ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை