×

மாநிலங்களவை எம்பி பதவி சோனியா அல்லது பிரியங்கா போட்டி?

சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் காலியாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சோனியா காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகியோரை போட்டியிட வைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இமாச்சலபிரதேசத்தில் தற்போது பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இவரது பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்க உள்ளது.

இதில், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. இதுகுறித்து இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஜே.பி.நட்டாவின் இடத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அல்லது பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளோம் ” என்று தெரிவித்தார்.

The post மாநிலங்களவை எம்பி பதவி சோனியா அல்லது பிரியங்கா போட்டி? appeared first on Dinakaran.

Tags : Sonia ,Priyanka ,Rajya Sabha ,Shimla ,Congress ,Sonia Gandhi ,Priyanka Gandhi ,Himachal Pradesh ,BJP ,JP Natta ,Rajya ,Sabha ,
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா இன்று பதவியேற்பு :கார்கே வாழ்த்து