×

ஊருக்கு வெளியே தனியாக புதிய சுவாமி சிலை வைத்து வழிபாடு ெசய்த மக்கள் தண்டராம்பட்டு அருகே பரபரப்பு பட்டியல் இனத்தவர் சென்ற கோயிலை புறக்கணித்து

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே பட்டியல் இனத்தவர் சென்ற கோயிலை புறக்கணித்து ஊருக்கு வெளியே தனியார் நிலத்தில் புதிய கோயில் ஏற்படுத்தி சுவாமி சிலைகள் வைத்து மக்கள் வழிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. பழமைவாய்ந்த இந்த கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து, பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என பட்டியல் இனத்தவர்கள் கடந்த ஆண்டு அப்போதைய கலெக்டர் முருகேஷிடம் மனு அளித்தனர். அதன் பின்னர் கலெக்டர், எஸ்பி இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் முத்துமாரியம்மன் கோயிலை திறந்து பட்டியல் இனத்தவர்களை சுவாமி வழிபாடு செய்ய வைத்தனர். அன்று முதல் காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் அறநிலையத்துறை மூலம் கோயிலைத் திறந்து பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஆனால், பட்டியல் இனத்தவர் கோயிலுக்குள் வரவேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்த மற்ற சமூகத்தினர் இந்த கோயிலுக்குள் சுவாமி கும்பிட செல்ல மறுத்து விட்டனர்.

The post ஊருக்கு வெளியே தனியாக புதிய சுவாமி சிலை வைத்து வழிபாடு ெசய்த மக்கள் தண்டராம்பட்டு அருகே பரபரப்பு பட்டியல் இனத்தவர் சென்ற கோயிலை புறக்கணித்து appeared first on Dinakaran.

Tags : Swami ,Thandaramptu ,Thandarampatu ,Swamy ,Thiruvannamalai District ,Thenmudiyanur Panchayat ,
× RELATED சித்திரை (ஈ) தந்த முத்திரை சீடர்கள்