×

வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அறிவுரை

ராசிபுரம்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, ராசிபுரத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நித்தியா மற்றும் போக்குவரத்து எஸ்ஐ நடராஜன் ஆகியோர், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கார்களில் சீட்பெல்ட் அணியாமல் வரும் வாகனங்களை நிறுத்தி கார், ஆட்டோக்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் பர்மிட் உள்ளதா என சரிபார்த்தனர். தொடர்ந்து கார்களில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு சீட்பெல்ட் லாக் ஆகி கொண்டால், எவ்வாறு வெளியே வருவது என்பது குறித்து வாகன ஓட்டுகளுக்கு செய்முறை விளக்கமளித்தார். தொடர்ந்து டூவீலர்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த பெண்கள், இளைஞர்கள், சிறார்களிடம், விலை உயர்ந்த மொபைல் போன்கள் வாங்க ஆர்வம் காட்டுவது மற்றும் அதிக திறன்கொண்ட பைக்குகளை வாங்கி ஓட்டும் நீங்கள், தலைக்கவசம் அணியாமல் செல்வதால் உங்களுக்கும், எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கும் விபத்து ஏற்பட்டு, அவர்கள் குடும்பத்தை இழந்து பரிதவிக்கும் நிலைக்கு செல்கின்றனர். சிறார்கள் வாகனம் ஓட்டி, அவர்கள் மூலம் கடந்த வருடத்தில் 15 விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் டூவீலரை ஓட்டுவதற்கு வழங்கக்கூடாது என அறிவுரை வழங்கினார்.

The post வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,National Road Safety Month ,District ,Nithya ,Traffic ,SI Natarajan ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து