×

பெரியார் பல்கலை.யில் மீண்டும் ஆய்வு

ஓமலூர்: பெரியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 4 பேர் பூட்டர் பவுண்டேசன் நிறுவனத்தை பல்கலைக்கழகத்தில் துவங்கினர். லாப நோக்குடன் ஓய்வுக்கு பிறகும் வருவாய் ஈட்டும் வகையில் துவங்கியதாக புகார் எழுந்தது. மேலும், புகார் தெரிவித்த பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவனை ஜாதிய ரீதியாக திட்டியது என 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யகோரி துணை வேந்தர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு விசாரணைக்கு தடை விதித்துள்ளது. மேலும், பூட்டர் நிறுவனதிற்கான பண பரிவர்த்தனை குறித்தும் கேள்வி எழுப்பியது. இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை குழு துணை இயக்குனர் நீலாவதி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் 3வது முறையாக நேற்று மாலை தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, கடந்த 2021ம் ஆண்டு முதல் நடந்துள்ள பண பரிவர்த்தனைகள் தொடர்பாகவும், பூட்டர் பவுடேசனுக்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளதா என்பது குறித்து ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதற்காக நியமிக்கப்பட்ட பணியாளர் ஊதியம் குறித்தும், பூட்டர் நிறுவனத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்தும், அதற்கான செலவினங்கள் குறித்துமான ஆவணங்கள் குறித்தும் தணிக்கை குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், பூட்டர் பவுண்டேசன் பண பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்கள் கிடைக்கும் வரை பல கட்டமாக சோதனை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post பெரியார் பல்கலை.யில் மீண்டும் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Omalur ,Jaganathan ,Registrar ,Thangavel ,Booter Foundation ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை சிண்டிகேட்...