×

பத்திரிகையாளர் மீது வழக்கு சாட்சியம் அளிக்க ஆஜராகாத எடப்பாடி

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக, ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2019ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சாட்சியங்களை பதிவு செய்வதற்காக இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தியதை தொடர்ந்து, ஜனவரி 30, 31ம் தேதிஆஜராகி சாட்சியம் வழங்குவதாக எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்படவில்லை. இதனால், எடப்பாடி பழனிசாமி நேற்று மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.

The post பத்திரிகையாளர் மீது வழக்கு சாட்சியம் அளிக்க ஆஜராகாத எடப்பாடி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,CHENNAI ,AIADMK ,Delhi ,Mathew Samuel ,Sayan ,Valayar Manoj ,Koda Nadu ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்