×

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வேலைவாய்ப்பு மையங்களில் இலவச பயிற்சி வகுப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையததால் நடத்தப்படவுள்ள குரூப் 4 தேர்வுக்கு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக டிஎன்பிஎஸ்சி, டிஎன்எஸ்யூஆர்பி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 தேர்விற்கு 6244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் சிறந்த மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெறலாம்.
இவ்வாறு ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வேலைவாய்ப்பு மையங்களில் இலவச பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC Group ,Chennai ,Commissioner ,Sundaravalli ,Tamil Nadu Public Service Commission ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...