×

பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

திண்டிவனம்: பாமக சார்பில் 2024- 2025ம் ஆண்டுக்கான வேளாண்மை நிழல் நிதி நிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் நேற்று வெளியிட்டனர். பின்னர் ராமதாஸ் கூறுகையில், ‘பாமகவின் நிழல் வேளாண்பட்ஜெட் 80 ஆயிரம் கோடி மதிப்பீடு கொண்டதாகவும், இதில் 60 ஆயிரம் கோடி வேளாண்மைக்கும், நீர்பாசனங்களுக்கு 20 ஆயிரம் கோடியும் செலவிடப்படும். வேளாண்மை வளராமல் வறுமையை ஒழிக்க முடியாது. நீர் பாசன ஏரிகளை மீட்டெடுத்தால் 40 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும். கடந்த பத்தாண்டுகளில் 15 ஆயிரம் ஏக்கர் ஏரிகள் காணாமல் போய்விட்டது. காணாமல் போன, ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்டெடுக்க ஏரிகள் மேலாண்மை வாரியம் உருவாக்கப்படும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் குவிண்டாலுக்கு ரூ. 500 ஊக்கத்தொகை, கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம், நியாய விலைக்கடையில் நாட்டு சர்க்கரை, என்எல்சி சுரங்க விரிவாக்க திட்டத்துக்கு தடைவிதிக்கப்படும். இதனையெல்லாம் தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாசின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாக உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அப்படி எந்த திரைப்படமும் வெளியாக வாய்ப்பு இல்லை’ என்றார்.

The post பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : BAMAK ,Tindivanam ,BAMA ,Ramadoss ,President ,Anbumani ,GK Mani ,Thilapuram, Villupuram district ,Ramadas ,Bamaga ,
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி