×

மூணாறில் பொதுமக்களை அச்சுறுத்தும் ‘படையப்பா’: குடியிருப்புகளை உடைப்பதால் கிலி

மூணாறு: மூணாறில் படையப்பா என்னும் காட்டுயானை, அடிக்கடி குடியிருப்புகளில் புகுந்து வீடுகளை உடைப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறில் பிரபல தனியார் நிறுவனத்தின் தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், அருகில் உள்ள தொகுப்பு வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், படையப்பா என்னும் காட்டுயானை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் நடமாடுகிறது. மேலும், அப்பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள வாழை, காரட், முட்டை கோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு குண்டுமலை அப்பர் டிவிஷனில் இறங்கிய படையப்பா யானை, அப்பகுதியில் இருந்த வீட்டு கொட்டகையை அடித்து நொறுக்கியது. தொடர்ந்து வாழை தோட்டத்திற்குள் புகுந்து அவற்றை தின்று தீர்த்தது. இரவு, பகல் பாராமல் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் நடமாடுவதால் தொழிலாளர்கள், பொதுமக்கள் இடையே அச்சம் அதிகரித்துள்ளது. இதனால், பெரும்பாலான எஸ்டேட் தொழிலாளர்கள் பல தலைமுறைகளாக வீடுகளுக்கு அருகில் செய்து வந்த காய்கறி விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர்.

The post மூணாறில் பொதுமக்களை அச்சுறுத்தும் ‘படையப்பா’: குடியிருப்புகளை உடைப்பதால் கிலி appeared first on Dinakaran.

Tags : Munnar ,Padayappa ,Munnar, Idukki District, Kerala State ,
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...