×

குமாரபாளையம் அடுத்த ஆனங்கூர் ரயில்வே கேட் பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு..!!

நாமக்கல்: குமாரபாளையம் அடுத்த ஆனங்கூர் ரயில்வே கேட் பழுதானதால் காலை 11 மணியில் இருந்து போக்குவரத்து கடும் பாதிப்பு அடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த ஆனங்கூர் ரயில்வே கேட் வயர் இருந்ததால் ரயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. ரயில்வே கேட் பழுதானதால் ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் காத்திருக்கின்றனர். ஆனங்கூர் ரயில்வே கேட் பழுதால் சங்ககிரி சென்று மீண்டும் திருச்செங்கோடு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பழுதான ரயில்வே கேட்டை விரைந்து சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post குமாரபாளையம் அடுத்த ஆனங்கூர் ரயில்வே கேட் பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Anangur railway gate ,Kumarapalayam ,Namakkal ,Namakkal district ,Dinakaran ,
× RELATED நாமக்கல் அருகே மரத்தின் மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு..!!