×

மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தினர் மீது மேலும் ஒரு வழக்கு: எம்.எல்.எம். நிறுவன அதிபருக்கு புதிய சிக்கல்

கோவை: மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தினர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை நீலாம்பூர் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நேற்று திரண்டதால் பரபரப்பு நிலவியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆன்லைன் செயலி நிறுவனத்துக்கு ஆதரவாக வாடிக்கையாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் கோவையில் நேற்று திரண்டிருந்தனர். கோவையில் யூடியுபில் விளம்பரம் பார்த்தால் லாபம் கிடைக்கும் என நூதன எம்.எல்.எம். மோசடி நடைபெறுவதாக புகார் எழுந்தது.

புகார் தொடர்பாக கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் வழக்கு பதிவுசெய்த நிலையில் எம்.எல்.எம். நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் நேற்று திரண்டனர். இணைய வழியில் பகுதி நேர வேலை என சைபர் க்ரைம் கும்பல் மோசடி செய்வதாக எழுந்த புகாரில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி அளித்த புகாரின் அடிப்படையில் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே எம்.எல்.எம். நிறுவன அதிபர் மீது கிரிமினல் வழக்கு உள்ள நிலையில் புதிதாக மேலும் ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டதால் சிக்கல் நிலவி வருகிறது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் கோவை சிங்காநல்லூர் போலீசார் நடவடிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

எம்.எல்.எம். மோசடி: வழக்கறிஞர் எச்சரிக்கை
இதனிடையே கோவை நிறுவனத்தின் செயல் எம்.எல்.எம். மோசடிதான் என்று வழக்கறிஞர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் எனக் கூறும் எந்த நிறுவனத்தையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தினர் மீது மேலும் ஒரு வழக்கு: எம்.எல்.எம். நிறுவன அதிபருக்கு புதிய சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Myv3 Ads ,MLM ,Coimbatore ,Neelampur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...