×

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு ஒன்றிய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு ஒன்றிய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி இந்த கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி 2024-2025 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

பாஜக தலைமையிலான பிரதமர் நரேந்திர மோடி அரசின் 2வது ஆட்சியின் இறுதி ஆண்டு நிதிநிலை அறிக்கை இதுவாகும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது நாளை தொடங்கி அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசின் சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, இந்த கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசு சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சட்டத்துறை அமைச்சர் ராம் மேக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்தில், திமுக சார்பில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, அதிமுக எம்.பி. தம்பிதுரை, மதிமுக எம்.பி. வைகோ, ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

The post நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு ஒன்றிய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Parliamentary Budget ,Delhi ,Parliamentary Budget Meeting ,President ,Thravupathi ,EU Government ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கை நாள் அன்று...