×

உடல் உறுப்பு தானம் செய்தவரின் மனைவி அரசு வேலை கேட்டு மனு

 

விருதுநகர், ஜன.30: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சேத்தூர் முகவூரை சேர்ந்த மாரியப்பன் மனைவி ராஜேஸ்வரி நேற்று மனு அளித்தார். மனுவில், முத்துசாமிபுரம் ஊராட்சியின் தூய்மை காவலராக பணியாற்றி வந்த மாரியப்பன் விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார். தமிழக அரசின் வழிகாட்டுதல் படி மாரியப்பனின் கல்லீரல், சிறுநீரகம், கண்கள் தானமாக வழங்கினோம். கலெக்டர் நேரில் வந்து அரசு மரியாதை செலுத்தினார். கணவர் இறந்த நிலையில் 10, 6, 4 வயதில் உள்ள 3 குழந்தைகளை காப்பற்ற முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன்.

குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்க முடியவில்லை. கலெக்டர் தலையிட்டு குழந்தைகளை காப்பற்ற அரசு அலுவலகங்களில் உதவியாளர் பணி ஏதேனும் வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதேபோல் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் திருச்சுழி பாறைக்குளத்தை சேர்ந்த அழகுபாண்டி அளித்த மனுவில், ஜன.16ல் கல்குவாரியில் குளிப்பதற்காக மனைவி சரஸ்வதி, மகள் பிரியதர்ஷினி சென்றனர். நிலை தடுமாறி கல்குவாரியில் நிரம்பி இருந்த மழைநீரில் மூழ்கி மனைவி, மகள் உயிரிழந்தனர். வறுமை நிலை அறிந்து முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post உடல் உறுப்பு தானம் செய்தவரின் மனைவி அரசு வேலை கேட்டு மனு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Mariyappan ,Rajeshwari ,Chettur Mugur ,Mariappan ,Muthusamipuram ,Tamil Nadu government ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு