திருப்பூர், ஜன.30: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கையில், சீருடை பணியாளர் கிரேடு 3 பணிக்கான எழுத்துத்தேர்வு முடிவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணியிடத்துக்கான உடற்தகுதி தேர்வு பிப் 6ம் தேதி முதல் நடைபெறுகிறது.
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும், பணிக்கான உடற்தகுதி தேர்வினை எதிர்கொள்ளும் பொருட்டு உடற்தகுதி தேர்வுக்கான பயிற்சியை அளிக்க திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உடற்தகுதி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை முன் பதிவு செய்ய, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post சீருடை பணியாளர் உடற்தகுதி தேர்வுக்கான பயிற்சி appeared first on Dinakaran.