×

தமிழ்ச்சங்கம் சார்பில் ராயகிரியில் இருபெரும் விழா

சிவகிரி,ஜன.30: தமிழ்ச்சங்கம் சார்பில் ராயகிரியில் நடந்த இருபெரும் விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்றார். சிவகிரி அருகே ராயகிரியில் தமிழ்ச் சங்கம் சார்பில் 8ம் ஆண்டு துவக்க விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா என இருபெரும் விழா நடந்தது. ராயகிரி பெரியார் பஸ் நிலையம் அருகே நடந்த இருபெரும் விழாவுக்கு தமிழ்ச் சங்கத்தின் ராயகிரி கிளைத் தலைவர் கேடிசி குருசாமி தலைமை வகித்தார். செயலாளர் அறிவழகன் வரவேற்றார். சங்க ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்சேரலாதன் அறிமுக உரை ஆற்றினார். பொருளாளர் அய்யா மாரியப்பன் செயல்திட்ட அறிக்கை வாசித்தார். துணைச்செயலாளர் செல்வராசு விழாவின் நோக்கத்தை எடுத்துரைத்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ சிறப்புரை ஆற்றினார். நெல்லை பொதிகைத் தமிழ்ச்சங்கத் தலைவர் ராசேந்திரன் வாழ்த்திப் பேசினார்.

The post தமிழ்ச்சங்கம் சார்பில் ராயகிரியில் இருபெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Rayagiri ,Tamil Sangam ,Sivagiri ,Tenkasi North ,District ,DMK ,Raja MLA ,inauguration ceremony ,
× RELATED குட்கா விற்ற மூதாட்டி உட்பட 2 பேர் கைது