×

மதிமுக தெருமுனை பிரசார கூட்டம்

பள்ளிபாளையம்: கழிவுநீரை தேக்கி வைத்து இரவு நேரங்களில் வெளியேற்றும் சாய ஆலைகளை தடை செய்ய வலியுறுத்தி, பள்ளிபாளையத்தில் மதிமுக தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வரும் சாயச்சாலைகளில் பகல் முழுவதும் கழிவுநீரை தேக்கி வைத்து, இரவில் வெளியேற்றப்படுகிறது. இதற்காகவே ஒவ்வொரு சாயப்பட்டறைகளில் இருந்தும் ஆவத்திபாளையம் ஓடை வரை பெரிய பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஓடையில் வெளியேறும் இந்த சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலந்து தண்ணீரை மாசுபடுத்துகிறது. கோடை காலம் துவங்குவதால் சாயகழிவுநீரால் ஆறு மாசடைந்து குடிநீர் பிரச்னை எழுந்து வருகிறது. சாயக்கழிவுகளை வெளியேற்றும் ஆலைகளை தடை செய்ய வலியுறுத்தி ஆவத்திபாளையத்தில் மதிமுகவினர் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடத்தினர்.

The post மதிமுக தெருமுனை பிரசார கூட்டம் appeared first on Dinakaran.

Tags : MDMK street campaign ,Pallipalayam ,Madhyamuk street campaign rally ,
× RELATED நீர்மோர் பந்தல் திறப்பு