×

பேரிடர் காலங்களில் பணியாற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் கவுரவிப்பு

 

கோவை, ஜன. 30: கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 20-ம் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி நிர்வாகத்தினர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக சிஆர்பிஎப் டெபுடி கமாண்டர் ராஜேஷ் தோக்ரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி மாணவ, மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் அரசு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில், முக்கிய நிகழ்வாக நாட்டின் பாதுகாப்பிலும், பேரிடர் காலங்களிலும் முன்கள பணியாளர்களாக பணியாற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். மேலும், பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் லோகித் எனும் சிறுவன் செய்த உலக சாதனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியில் பயின்ற மறைந்த மாணவியின் நினைவாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

The post பேரிடர் காலங்களில் பணியாற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் கவுரவிப்பு appeared first on Dinakaran.

Tags : CRPF ,Coimbatore ,Counter Mill ,Deputy Commander ,Rajesh Togra ,
× RELATED மணிப்பூர் சிஆர்பிஎப் முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 வீரர்கள் பலி