×

சில்லி பாயின்ட்…

* ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து வீரர் போப் ரன் எடுப்பதை தடுக்கும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பும்ரா மீது நடுவர்கள் புகார் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பும்ராவை எச்சரித்த ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன், அபராதமாக ஒரு ‘தரக்குறைவு’ புள்ளியையும் வழங்கினார்.

* உத்தரகாண்ட் அணியுடன் மொகாலியில் நடந்த ரஞ்சி கோப்பை எலைட் டி பிரிவு லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. டெல்லி 147 & 264/9 டிக்ளேர்; உத்தரகாண்ட் 239 & 165. டெல்லி 2வது இன்னிங்சில் 5 வீரர்கள் டக் அவுட்டான நிலையில், பொறுப்புடன் விளையாடி 194 ரன் விளாசிய கேப்டன் ஹிம்மத் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நடப்பு சீசனில் டெல்லி அணி பெற்ற முதல் வெற்றி இது.

* இலங்கையுடன் நடக்க உள்ள டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமுக வீரர்கள் நூர் அலி ஸத்ரன், ஜியா உர் ரகுமான், முகமது இஷாக், நவீத் ஸத்ரன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

* இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில் தோற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 3 இடங்கள் பின்தங்கி 5வது இடத்தை பிடித்துள்ளது.

* கேலோ இந்தியா ஆண்கள் 4×100 மீட்டர் மெட்லி ரிலே பிரிவில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

* கேலோ இந்தியா இளைஞர் பளுதூக்குதல் மகளிர் 76 கிலோ எடை பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை எம்.ஏ.ஹசினா ஷ்ரின் வெண்கல பதக்கம் வென்றார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Bumrah ,England ,Pope ,ICC ,Richie Richardson ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.