×

கோயம்பேடு பேருந்து முனையம் இருந்த இடத்தில் லுலு மால் அமைக்க நிலம் தரப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி: தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: கோயம்பேடு பேருந்து முனையம் உள்ள இடத்தில் லுலு மால் அமைக்க நிலம் தரப் போவதாக பரவி வருவது வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்துக்கு புறநகர் பேருந்து நிலையத்தை மாற்றியுள்ளது தமிழக அரசு.

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் மற்றொரு பகுதியை இந்த ஆண்டு இறுதிக்குள் கூத்தம்பாக்கத்திற்கு மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது தமிழக அரசு. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை திருமழிசைக்கு நிரந்தரமாக மாற்றவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதற்கிடையே கோயம்பேட்டில் பெரிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். எனினும், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தில் எந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை

அதற்குள், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தை லூலூ மால் அமைக்க வழங்க உள்ளதாக தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவின. அபுதாபியை தலைமையிடமாக கொண்ட லுலு மால் நிறுவனத்துடன் தமிழக அரசு கடந்த 2022ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றபோது இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எனவே கோயம்பேடு இடத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்க தமிழக அரசுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

* வதந்தி:

கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தைக் காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லுலு மால் அமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு தரப்போவதாகப் பலரும் வதந்தி பரப்புகின்றனர்.

* உண்மை என்ன?

அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற இந்த பொய்த்தகவலை உண்மை என்று நம்பி, அரசியல் கட்சியினர் சிலரும் தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு வீட்டுவசதித்துறைச் செயலாளர் சமயமூர்த்தி மேற்கண்ட தகவல் முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயலாகும் என்று விளக்கம் அளித்துள்ளது.

The post கோயம்பேடு பேருந்து முனையம் இருந்த இடத்தில் லுலு மால் அமைக்க நிலம் தரப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி: தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Lulu Mall ,Coimbed Bus Terminal ,Tamil Nadu Government ,Chennai ,Coimpet ,Chengalpattu ,Glampakt ,Dinakaran ,
× RELATED அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு,...