×

மலம்புழா அணை பூங்காவில் மலர்கண்காட்சி நிறைவு

பாலக்காடு: பாலக்காடு அருகே மலம்புழா அணை பூங்காவில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மலர்கண்காட்சி நேற்று நிறைவு பெற்றது. ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள மலர்களை பார்த்து ரசித்தனர். பாலக்காடு அருகே மலம்புழா அணை பூங்காவில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக்கழகம் மற்றும் கேரள அரசு நீர்வள பாசனத்துறை சார்பில் கடந்த 5 நாட்களாக மலர்கண்காட்சி நடைபெற்று வந்தது.

விடுமுறை நாளான நேற்று திரளாக மக்கள் மலம்புழா பூங்காவிற்கு வருகை தந்து மலர்கண்காட்சியை கண்டுரசித்தனர். சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பினுமோள் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ பிரபாகரன் கலந்து கொண்டு பேசுகையில், மலம்புழா அணை பூங்காவை கூடுதல் அழகுப்படுத்துவதற்கான திட்டங்களை மாநில அரசு மற்றும் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் வழிவகை செய்து வருகிறது. இவற்றை மேலும் அழகுபடுத்தி சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான திட்டங்களை மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் ஏற்படுத்தி வருகிறது என்றார். நிகழ்ச்சியில் மலம்புழா பிளாக் பஞ்சாயத்து தலைவர் பிஜோய், கிராம பஞ்சாயத்து தலைவர் ராதிகா மாதவன், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக்கழக செயலாளர் டாக்டர். சில்பர்ட் ஜோஸ், நடிகை மோக்‌ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மலம்புழா அணை பூங்காவில் மலர்கண்காட்சி நிறைவு appeared first on Dinakaran.

Tags : Malampuza Dam Park ,Palakkad ,Malampuzha Dam Park ,
× RELATED ஷொர்ணூர் – நிலம்பூர் ரோடு இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்