×

கீழ்வெண்மணி தியாகிகளையும் நினைவு சின்னத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்து இருப்பதாக முத்தரசன் கண்டனம்

டெல்லி : கீழ்வெண்மணி தியாகிகளையும் நினைவு சின்னத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்து இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டித்துள்ளார். ஆளுநர் ரவி கீழ்வெண்மணி தியாகி பழனிவேலை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். தியாகி பழனிவேலிடம் கீழ்வெண்மணி போராட்ட வரலாற்றையும் அவர் கேட்டறிந்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர், கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தூண் குறித்தும் இடதுசாரிகள் பற்றியும் விமர்சனம் செய்தது சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கீழ்வெண்மணி தியாகிகளை வலுக்கட்டாயமாக சந்தித்து தவறான தகவல்களை ஆளுநர் பதிவு செய்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தியாகிகளுக்கு இவ்வளவு பெரிய கட்டிடமா என்று கேட்ட ஆளுநர் ரவிக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனை பெற முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாக ஆளுநர் ரவி கூறியிருந்தார். பாட்டாளி வர்க் சாம்பியனாக அழைத்து கொள்ளும் ஒரு அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படகோலை செய்யப்பட்ட 44 ஏழை தொழிலாளர்களை நினைவுக் கூறும் வகையில், விலை உயர்ந்த கான்க்ரீட் கட்டுமானம் ஓர் நினைவுச் சின்னமாக அமைந்து இருப்பது முரணானது மட்டுமின்றி தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆளுநரின் இத்தகைய கருத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

The post கீழ்வெண்மணி தியாகிகளையும் நினைவு சின்னத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்து இருப்பதாக முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,Governor RN ,Ravi ,Kilivenmani ,Delhi ,Communist Party of India ,State Secretary ,Governor ,Ravi Kielvenmani ,Tyagi Palanivel ,Martyr Palanivel ,R.N. Ravi ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து