×

போட்டியின் விதிகளை மீறி செயல்பட்டதாக பும்ராவிற்கு ஒரு டீ-மெரிட் புள்ளியை வழங்கியது ஐசிசி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் விதிகளை மீறி செயல்பட்டதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஒரு டீ-மெரிட் புள்ளியை ஐசிசி வழங்கியுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விதிகளை மீறி செயல்பட்டதாக ஐசிசி புகார் தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் 2வது இன்னிங்சின்போது ஆட்டத்தின் 81வது ஓவரில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் போப் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் ரன் ஓடும்போது பும்ரா வேண்டுமென்றே அவர் ரன் ஓடும் பாதையில் குறுக்கிட்டதாகவும், அதனால் போப் ரன் ஓடுவதில் இடையூறு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ரன் ஓடும்போது பும்ரா மற்றும் போப் ஆகியோர் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டனர். இந்நிலையில் பும்ரா வேண்டுமென்றே போப் ரன் ஓடும் பாதையில் குறுக்கிட்டதாக பும்ராவிற்கு ஒரு டீ-மெரிட் புள்ளியை ஐசிசி வழங்கியுள்ளது.

தொடர்ச்சியாக ஒரு வீரர் 4 டீ-மெரிட் புள்ளிகளை 24 மாதத்திற்குள் பெற்றால் அந்த வீரருக்கு ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். தற்போது பும்ரா டீ-மெரிட் புள்ளியை பெற்றுள்ளார்.

The post போட்டியின் விதிகளை மீறி செயல்பட்டதாக பும்ராவிற்கு ஒரு டீ-மெரிட் புள்ளியை வழங்கியது ஐசிசி! appeared first on Dinakaran.

Tags : Bumrah ,ICC ,HYDERABAD ,India ,England ,Dinakaran ,
× RELATED துஷாரா, பும்ரா அபார பந்துவீச்சு: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா