×

அயோத்தி கோயில் விழா ஒளிபரப்பு.. மனுதாரரின் புகார் கற்பனையானது; தமிழ்நாடு அரசை இந்து விரோத அரசாக சித்தரிப்பதற்கான முயற்சி: டிஜிபி கண்டனம்!!

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் விழா ஒளிபரப்பு தொடர்பாக மனுதாரர் புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தனது பதில் மனுவை தாக்கல் செய்திருக்கிறார். 15 நாட்களில் புகாருக்கு மறுப்பு தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அயோத்தி கோயில் திறப்பு விழாவை ஒட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அயோத்தி கோயில் தொடக்க விழா நிகழ்ச்சிகளை கோயில் வளாகத்தில் ஒளிபரப்பக் கூடாது என வாய்மொழி உத்தரவு என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மனுதாரர் வினோஜ் பன்னீர்செல்வம் புகாருக்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பதில் மனுவில்;

அயோத்தி கோயில் விழா ஒளிபரப்பு: டிஜிபி பதில் மனு
தமிழ்நாடு அரசை இந்து எதிர்ப்பு அரசு என்று காட்டுவதற்கு திட்டமிட்டு முயற்சி நடப்பதாக டிஜிபி பதில் அளித்துள்ளார். அயோத்தி கோயில் தொடக்க விழா நிகழ்ச்சிகளை கோயில் வளாகத்தில் ஒளிபரப்பக் கூடாது என வாய்மொழி உத்தரவு என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. வினோஜ் பன்னீர்செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுதாரரின் புகார் கற்பனையானது: அரசு தரப்பு
மனுதாரர் உண்மைக்கு மாறான மற்றும் கற்பனையான புகார்களை தெரிவித்துள்ளதாக அரசு தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. வாய்மொழி மூலம் முதல்வர் உத்தரவிட்டார் என்பது அடிப்படை ஆதாரமற்ற தவறான தகவல். வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மனுதாரர் கூறுவது அவரது கற்பனையே என்று தமிழ்நாடு அரசு வாதமிட்டுள்ளது.

இந்து விரோத அரசாக சித்தரிப்பதற்கு டிஜிபி கண்டனம்
மனுதாரர் தாக்கல் செய்த மனுவில் 9 பத்திகளில் முதல்வர் பற்றி அவதூறுகளையே கூறியுள்ளார். ஏற்கனவே ஐகோர்ட்டில் மனு நிலுவையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அமித் ஆனந்த் திவாரி வாதிட்டார். மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட வேண்டும். அரசு அதிகாரிகள், போலீஸ் தலையீடு இன்றி கோயில்களில் சிறப்பு வழிபாடு, பூஜை, அன்னதானம் நடைபெற்றது என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

The post அயோத்தி கோயில் விழா ஒளிபரப்பு.. மனுதாரரின் புகார் கற்பனையானது; தமிழ்நாடு அரசை இந்து விரோத அரசாக சித்தரிப்பதற்கான முயற்சி: டிஜிபி கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Ayodhya ,Temple ,Festival ,Tamil Nadu ,DGB ,Delhi ,DGP ,Sankar Jival ,Ramar Temple Festival ,Tamil ,Nadu ,Ayothi Temple Festival ,
× RELATED கடந்த 7 ஆண்டுகளில் பலமடங்கு உயர்ந்த...