×

பூஜையில் கலந்து கொள்ளாததால் அரை நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட மாணவர்: கர்நாடகா விடுதியில் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவில் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பேத்கர் பூஜையில் கலந்து கொள்ளாத மாணவரை அரை நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகா மாநிலம் கலபுரகி பகுதியில் அரசுக்கல்லூரி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பேத்கர் பூஜை நடந்தது. அந்த பூஜையில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது மாணவர் கலந்து கொள்ளவில்லை. அதனால் ஆவேசமடைந்த பிற மாணவர்கள், அந்த மாணவரிடம் தகராறு செய்தனர்.

பின்னர் அந்த மாணவரை தாக்கினர். தொடர்ந்து அம்பேத்கரின் புகைப்படத்துடன் அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் கர்நாடக உயர் நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் நடந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் 20 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பூஜையில் கலந்து கொள்ளாததால் அரை நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட மாணவர்: கர்நாடகா விடுதியில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Ambedkar Puja ,Kalapuragi ,
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு