×

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு செல்ல இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் பயணம் திடீர் ரத்து..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு செல்ல இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உலக புகழ்பெற்ற குகை ஓவியங்கள் உள்ளது. இதனை பார்வையிடுவதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை 3 மணியளவில் புதுக்கோட்டைக்கு வருகை தருவதாக இருந்தார். ஏற்கனவே நேற்று நாகை மாவட்டத்திற்கு சென்று இன்று காரைக்குடிக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு அதனை முடித்துக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு மாலை 3 மணிக்கு வருவதாக இருந்தது.

இதற்கான பாதுகாப்பு பணிகளில் மாவட்ட காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் ஆளுநர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தான் ஆளுநரின் வருகை ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு செல்ல இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் பயணம் திடீர் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Governor RN ,Pudukottai district ,Chitthannavasal ,Pudukottai ,Governor RN Ravi ,Siddhannavasal ,Tamil Nadu ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்