×

சங்கி என்பது கெட்டவார்த்தை என்று எனது மகள் ஐஸ்வர்யா சொல்லவில்லை: நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

சென்னை: சங்கி என்பது கெட்டவார்த்தை என்று எனது மகள் ஐஸ்வர்யா சொல்லவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, அதில் மதம் சார்ந்த விஷயங்களை பற்றியும் இப்படம் பேச உள்ளது. அடுத்தமாதம் படம் ரிலீஸாக உள்ள நிலையில் சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் பேசிய ஐஸ்வர்யா, நான் எனது தந்தையை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி. எனக்கு இந்த வார்த்தையை கூறும்போது மிகவும் கோபமாக இருந்தது. இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும், எனது தந்தை சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அவர் சங்கியாக இருந்தால் ‘லால் சலாம்’ படத்தில் இருக்க மாட்டார். மனித நேயமிக்கவரால் மட்டும் தான் இந்த படத்தில் நடிக்க முடியும். அந்த தைரியம் அவருக்கு மட்டும் தான் உள்ளது. இதை கர்வமாக சொல்வேன் என்றார். இந்நிலையில், தனது தந்தையை சங்கி எனக் குறிப்பிடுவது வேதனை அளிப்பதாக ஐஸ்வர்யா பேசியது குறித்து சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை; எனது மகள் ஐஸ்வர்யா சரியாகவே பேசியுள்ளார்.

சங்கி என்பது கெட்டவார்த்தை என்று எனது மகள் ஐஸ்வர்யா சொல்லவில்லை. லால் சலாம் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சங்கி என்ற வார்த்தையை ஐஸ்வர்யா பயன்படுத்தவில்லை. லால் சலாம் படம் நன்றாக வந்திருக்கிறது; மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும். ஆன்மீகவாதியான நான் அனைத்து மதங்களுக்கும் சொந்தமானவன். அப்பா ஆன்மிகவாதி, அனைத்து மதத்தையும் விரும்பும் அவரை ஏன் சங்கி என்று சொல்கிறார்கள் என்பதே ஐஸ்வர்யா கேள்வி. அப்பா சங்கி இல்லை என்பதே என் மகள் ஐஸ்வர்யாவின் கருத்து என விளக்கம் அளித்தார்.

The post சங்கி என்பது கெட்டவார்த்தை என்று எனது மகள் ஐஸ்வர்யா சொல்லவில்லை: நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Aishwarya ,Rajinikanth ,Chennai ,Changi ,Rajini ,Dinakaran ,
× RELATED நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா...