×

ஆளுநர் பங்கேற்ற காரைக்குடி அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்..!!

சிவகங்கை: காரைக்குடி ஆளுநர் பங்கேற்ற காரைக்குடி அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழாவை அமைச்சர் ராஜ கண்ணப்பன் புறக்கணித்துள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 34வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று 40,414 பட்டதாரிகளில் 348 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழா அழைப்பிதழிலில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்பதாக அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அமைச்சர் வருவார் என அதற்கான ஏற்பாடுகளும் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆளுநர் பங்கேற்ற காரைக்குடி அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழாவை அமைச்சர் ராஜ கண்ணப்பன் புறக்கணித்துள்ளார். அண்ணா நினைவு நாளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஒத்திவைக்க அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அதனை ஆளுநர் மாளிகை ஏற்க மறுத்தது. ஆளுநர் மாளிகை ஏற்க மறுத்த நிலையில் இன்றைய விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

The post ஆளுநர் பங்கேற்ற காரைக்குடி அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்..!! appeared first on Dinakaran.

Tags : Karaikudi Alagappa University ,Governor ,Minister ,Raja Kannappan ,Sivagangai ,Karaikudi ,Rajakannapan ,convocation ,Tamil Nadu ,RN Ravi ,
× RELATED தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம்