×

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே உண்மையான ராமராஜ்ஜியத்தை வழங்க முடியும்: காங்.எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர்

திருவள்ளூர் : காங்கிரஸ் கட்சியால் மட்டுமே உண்மையான ராமராஜ்ஜியத்தை வழங்க முடியும் என காங்கிரஸ். எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஜனவரி 22 அன்று, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இந்துத்துவாவை முன்னிறுத்துபவராக இருந்தார். அயோத்தியில் இருந்து எழும் மத உணர்வுகளின் அலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டது. பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை. காங்கிரஸும் அந்நிகழ்ச்சிக்கு செல்ல மறுத்தது.

இந்நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் நகர காங்கிரஸ் சார்பாக ஆளும் ஒன்றிய பாஜக அரசின் அவல நிலையை கண்டித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர் பேசியுள்ளார். குண்டு பாய்ந்து உயிரிழக்கும் தருவாயிலும் ஹேராம் என்று கூறிய காந்தியே உண்மையான ராம பக்தர். நள்ளிரவில் பெண் ஒருவர் நகைகளுடன் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்பதே ராமராஜ்ஜியம் என காந்தி எண்ணினார். தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் இதுபோல் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியுமா என காங்கிரஸ். எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post காங்கிரஸ் கட்சியால் மட்டுமே உண்மையான ராமராஜ்ஜியத்தை வழங்க முடியும்: காங்.எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் appeared first on Dinakaran.

Tags : Congress party ,Congress ,MLA ,Durai Chandrasekhar ,Thiruvallur ,Ayodhya Ram Temple ,Narendra Modi ,Hindutva ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் வெற்றியை...