×

பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த எலான் மஸ்க்.. இனி பெர்னார்ட் அர்னால்ட் தான் நம்பர் 1 பணக்காரர்: சொத்து மதிப்பு இவ்வளவா?

வாஷிங்டன்: உலகின் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தை இழந்தார். எலான் மஸ்க்கை 2-வது இடத்துக்கு தள்ளிவிட்டு பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்தை பிடித்தார். உலகப் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக, பெரு நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் மாறி மாறி முதல் இடம் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், பணக்காரர் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த எலாஸ் மஸ்க்கை பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க், எக்ஸ் தளம் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு உலகின் பணக்காரர்களில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது பணக்காரர்களில் பட்டியலில் முதல் இடத்தில் பிரெஞ்ச் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்.

எனவே, அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தின் நிகர மதிப்பு 207.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மறுபுறம், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் நிகர மதிப்பு 204.7 பில்லியன் டாலர் உள்ளது. இதனால், உலகின் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் பின்னுக்கு தள்ளி, முதலிடத்தை கைப்பற்றினார் பெர்னார்ட் அர்னால்ட்.

உலகின் முதல் 10 பணக்காரர்கள் லிஸ்ட்:
பெர்னார்ட் அர்னால்ட் (207.6 பில்லியன் டாலர்)
எலான் மஸ்க் (204.7 பில்லியன் டாலர்)
ஜெஃப் பெசோஸ் (181.3 பில்லியன் டாலர்)
லாரி எலிசன் (142.2 பில்லியன்டாலர்)
மார்க் ஜுக்கர்பெர்க் (139.1 பில்லியன் டாலர்)
வாரன் பஃபெட்(127.2 பில்லியன் டாலர்)
லாரி பேஜ் (127.1 பில்லியன்டாலர்)
பில் கேட்ஸ் (122.9 பில்லியன் டாலர்)
செர்ஜி பிரின் (121.7 பில்லியன்டாலர்)
ஸ்டீவ் பால்மர்(118,8 பில்லியன்டாலர்)

மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 11ஆம் இடத்திலும், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 16ஆம் இடத்திலும் உள்ளனர். முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 104.4 பில்லியன் டாலரும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 75.7 பில்லியன் டாலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த எலான் மஸ்க்.. இனி பெர்னார்ட் அர்னால்ட் தான் நம்பர் 1 பணக்காரர்: சொத்து மதிப்பு இவ்வளவா? appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,Bernard Arnold ,Washington ,France ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...