×

க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

வருசநாடு, ஜன. 29: கடமலை மயிலை ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வாலிப்பாறை, தும்மக்குண்டு மூலக்கடை, குமணந்தொழு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேனி, ஆண்டிபட்டி, கம்பம், சின்னமனூர், மதுரை, திண்டுக்கல் போன்ற நகரங்களில் விடுதிகளில் தங்கி பயிலும் அவல நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து கடமலைக்குண்டு வர்த்தக சங்க நிர்வாகி மாரிமுத்து கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக மாணவர்களின் நலன்கருதி அரசு கலைக் கல்லூரி துவங்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : K. Mayiladumpara union ,Varusanadu ,Kadamalai Mailai Union ,Kadamalaikundu ,Mayiladumparai ,Valiparai ,Tummakundu Moolakadai ,Kumanantholu ,Kadamalai Maylai Union ,K. Mayiladumparai Union ,Dinakaran ,
× RELATED கடமலை அருகே கிணறு பைப்லைனை சேதப்படுத்திய யானைகள்