×

ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளால் பயன் பெறுங்கள்: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

 

சிவகங்கை, ஜன. 29: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் விவசாயம் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருவதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் கிராமப்பகுதிகளில் தனிநபர் பொருளாதாரம் முன்னேற்றம் பெறும் வகையில் திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிராமப்பகுதியிலுள்ள விவசாயிகள் தரிசு நிலங்களை மேம்படுத்தி பயன்படுத்துவதற்கும் மற்றும் தென்னை மரங்களுக்கு வாய்க்கால் கட்டுதல், விளை நிலங்களில் வரப்பு கட்டுதல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், வரத்துக்கால்வாய் சீரமைத்தல், தீவனப்பொருள் வளர்த்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல், கால்நடை வளர்ப்பிற்கு கொட்டகை அமைத்தல் மற்றும் கறவை மாடுகள், ஆடுகள் வளர்ப்பு என பல்வேறு துறைகளுடன் ஊரக வளர்ச்சித்துறை ஒருங்கிணைந்து எந்தெந்தப் பகுதியில் மக்களின் தேவை எது என கண்டறிந்து, அதற்கேற்ப திட்டங்களை வடிவமைத்து தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளால் பயன் பெறுங்கள்: விவசாயிகளுக்கு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...