×

கொள்முதல் எடை குறைவு டிஜிட்டல் தராசுகள் பயன்படுத்த கோரிக்கை

தொண்டி, ஜன. 29: எஸ்.பி.பட்டினம் பகுதியில் மீன் விற்பனை செய்ய வருபவர்கள், முத்திரையிடாத தராசுகளை பயன்படுத்துவதாகவும், இதனால் கொள்முதல் செய்யும் மீன்களின் எடை குறைவாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் பகுதியில், தினந்தோறும்ம் மீன் விற்பனை செய்ய பாசிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விற்பனையாளர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

இவர்களில் பலரும் முத்திரையிடப்படாத எடைக்கற்கள் கொண்ட தராசுகளை பயன்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் கொள்முதல் செய்த பின், மீன்களின் எடை குறைவதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, அனைத்து மீன் வியாபாரிகளும் டிஜிட்டல் தராசுகளை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘தெருக்களில் நேரடியாக வந்து மீன் வியாபாரம் செய்பவர்களின் தராசு மற்றும் எடை கற்கள் உள்ளன. ஆனால் அவர்கள் முறையாக எடைக்கற்கள் மற்றும் தராசுகளை ஆண்டு தோறும் முத்தியிடுவதில்லை. இதனால் பல நேரங்களில் 1 கிலோ மீன்கள் வாங்கினால் 200 கிராம் வரை குறைவாக உள்ளது. எனவே இதுபோன்ற வியாபாரிகள் அனைவரும் டிஜிட்டல் தராசுகளை பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

The post கொள்முதல் எடை குறைவு டிஜிட்டல் தராசுகள் பயன்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dondi ,SB Pattinam ,Thondi ,Pasipattanam ,Dinakaran ,
× RELATED தொண்டி பகுதியில் வனவிலங்குகளை பாதுகாக்க தண்ணீர் தடாகம் அமைக்க கோரிக்கை