×

‘பப்’ வாசலில் போதையில் நிற்க முடியாமல் விழுந்த இளம்பெண்

 

புதுச்சேரி, ஜன. 29: புதுச்சேரியில் போதை தலைக்கேறிய இளம்பெண் ஒருவர் நிதானம் இல்லாமல் பப் வாசலில் விழுந்து புரள்வதும், அவருடைய ஆண் நண்பர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி நகர பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம், விதவிதமான 500க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், மது அருந்தும் வசதியுள்ள பார்கள் உள்ளன.

தற்போது ரெஸ்டாரண்டுகளில் மது அருந்தும் வசதி கொண்ட ரெஸ்டோ பாராக மாற்றப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் ரெஸ்டாரண்டும், மேல்தளத்தில் பார் இயங்குகிறது. அத்துடன் இங்கு இரவு நேர பார்ட்டியில் அதிக சத்தத்துடன் இசையும் ஒலிக்கிறது. குடியிருப்புகளில் இருந்த ரெஸ்டாரண்ட்டுகள் பலவும் ரெஸ்டோ பார்களாக மாற்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ரெஸ்டோ பார்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், நகரப்பகுதிகளில் ரெஸ்டோ பார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் நள்ளிரவு வரை பப்பில் குடித்துவிட்டு போதையில் நகரில் உலா வருவதால், அதிக விபத்துகள் மட்டுமின்றி பல்வேறு சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகின்றன. மேலும்
இளம்பெண்கள் பலர் போதை தலைக்கேறி பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது அதிகரித்துள்ளது. அந்த வகையில், குடியரசு தின தொடர் விடுமுறையையொட்டி தனது ஆண் நண்பருடன் புதுச்சேரிக்கு வந்த இளம் பெண் ஒருவர் செட்டித்தெருவில் உள்ள பப்பில் மது அருந்தி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அந்த இளம் ஜோடி ரெஸ்டோ பாரை விட்டு வெளியே வருகின்றனர். அப்போது அந்த இளம்பெண் உச்சக்கட்ட போதையில், நிதானம் இல்லாமல் பப் வாசலில் உருண்டு புரள்கிறார். அப்போது, அவருடன் வந்த ஆண் நண்பர் அந்த இளம்பெண்ணை அழைத்து செல்ல நீண்ட நேரமாக முயற்சி செய்கிறார். முடியாத நிலையில் தரையில் மயங்கி கிடக்கிறார். ஒருகட்டத்தில் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை அவர் ஆட்டோவில் ஏற்றிச் செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஒரு பண்பாடு இல்லாவிட்டால் பாரதம் இல்லை என்ற பாடலுடன் வீடியோ வைரலாகி வருகிறது.

The post ‘பப்’ வாசலில் போதையில் நிற்க முடியாமல் விழுந்த இளம்பெண் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED புதுச்சேரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை