×

மரவள்ளி கிழங்கு விலை தொடர் சரிவு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் வட்டாரம் பேளுக்குறிச்சி, கல்குறிச்சி, மேலப்பட்டி, சிங்களாந்தபுரம், புதுச்சத்திரம் வட்டாரம் மின்னாம்பள்ளி, திருமலைப்பட்டி, நவணி, உடுப்பம், குளத்துப்பாளையம், கொல்லிமலை வட்டாரம் அரியூர் நாடு, வளப்பூர்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை, வியாபாரிகள் வாங்கி செல்லப்பம்பட்டி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். ஜவ்வரிசி ஆலையில், மரவள்ளி கிழங்கில் உள்ள மாவு சத்து புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது டன்னுக்கு ரூ.1000 வரை விலை குறைந்து, ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு, கடந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ரூ.1000 வரை விலை குறைந்து, டன் ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த வட்டார பகுதிகளில், மரவள்ளி கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால், வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மரவள்ளிக் கிழங்கு விலை குறைந்துள்ளதால், அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

The post மரவள்ளி கிழங்கு விலை தொடர் சரிவு appeared first on Dinakaran.

Tags : SENTHAMANGALAM ,DISTRICT ,BELUKURICHI ,KALKURICHI ,MELAPATI ,SINHALANDAPURAM ,PUDUCHATHURAM DISTRICT ,MINNAMALLI ,THIRUMALIPTIYA ,NAVANI ,UDUPAM ,GULATHUPPALAYAM ,KOLLIMALI DISTRICT ,ARYOOR NADU ,Purna ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை