×

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடம் சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு போக்குவரத்து கழகங்களில் நிலவும் பிரச்னைகளில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மதுரையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஆரப்பாளையத்தில் இருந்து கிளம்பி காளவாசல் சென்று கொண்டிருந்தபோது, போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் வந்த தனியார் வாகனத்திற்கு வழி கொடுக்க இயலாத நிலையில், ஆத்திரமடைந்த தனியார் வாகன ஓட்டுநர் அரசு பேருந்தை முந்தி சென்று மறித்து அரசு பேருந்து ஓட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் மன வேதனையை அளிக்கிறது.முதல்வர் அரசு போக்குவரத்து கழகங்களில் நிலவும் பிரச்னைகளை தீர விசாரித்து, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஓய்வூதிய பயன்கள், ஊதிய உயர்வு, நடத்துனர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடுகட்டவும், சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். …

The post தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடம் சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Transport Corporation ,Bannerselvam ,Chennai ,O. Pannerselvam ,Chief Minister ,Government Transport Corporation ,O.P. Bannerselvam ,
× RELATED வார விடுமுறையில் சிறப்பு பேருந்துகள்...