×

குஜராத்தில் நிலநடுக்கம்

அகமதாபாத்: குஜராத்தின் கட்ச் பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0ஆக பதிவானது. குஜராத்தின் கட்ச் மாவட்டம் பச்சாவ் என்ற இடத்திலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு, வடமேற்கு பகுதியில் நேற்று மாலை 4.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளதாக நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது. இதில் எந்த உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் வௌியாகவில்லை.

The post குஜராத்தில் நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : in ,Gujarat ,AHMEDABAD ,Kutch region of Gujarat ,North, North-West region ,Bachau, Kutch district of Gujarat ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...