×

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெங்காலி நடிகை மரணம்

கொல்கத்தா: மிருணாள் சென் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்த நடிகை லா மஜும்தார் புற்றுநோயால் உயிரிழந்தார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிரபல பெங்காலி நடிகை லா மஜும்தார் (65), கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலமானார்.

இவரது மறைவுக்கு மேற்குவங்க திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த லா மஜும்தார், முதன்முதலாக பிரபல இயக்குனர் மிருணாள் சென்னின் பரசுராம் (1979) படத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த ஸ்ரீலா மஜும்தார், மாநில அரசின் விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெங்காலி நடிகை மரணம் appeared first on Dinakaran.

Tags : Kolkata ,La Majumdar ,Mirunal Sen ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...