×

இயந்திரக் கோளாறு காரணமாக லட்சத்தீவில் கரை ஒதுங்கிய துத்துக்குடி மீன்பிடி படகு: 24 மணி நேரம் போராடி மீட்ட கடலோர காவல்படை

லட்சத்தீவு: இயந்திரக் கோளாறு காரணமாக லட்சத்தீவில் கரை ஒதுங்கிய துத்துக்குடி மீன்பிடி படகை 24 மணி நேரம் போராடி கடலோர காவல்படை மீட்டது. தூத்துக்குடியில் இருந்து 9 மீனனர்களுடன் சென்று கொண்டிருந்த இந்திய மீன்பிடி படகு ஒன்று, இயந்திரக் கோளாறு காரணமாக லட்சத் தீவை ஒட்டிய மினிகாய் தீவில் 46 என்எம் தொலைவில் அமைந்துள்ளள ஆழ்கடலில் சிக்கிக் கொண்டது. தகவலறிந்த இந்திய கடலோர காவல்படை கப்பலான சமர்த், இருளில் சிக்கித் தவித்த மீன்பிடி படகை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

தொழில்நுட்ப குழுவினர் பழுதடைந்த படகை சரிசெய்ய முயன்றும் பலனிக்கவில்லை. அதனால் அந்த மீன்பிடி படகை அங்கிருந்து மீட்டு, மினிகாய் துறைமுகத்திற்கு இந்திய கடலோர காவல்படை கப்பல் இழுத்துச் சென்றது. தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தொடர்ச்சியான நடவடிக்கைக்குப் பிறகு, மீன்பிடி படகு மற்றும் அந்த படகில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் எல் அண்ட் எம் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய கடலோர காவல்படையின் உறுதியான மற்றும் விரைவான நடவடிக்கையால் மீனவர்களும் அவர்களின் படகும் மீட்கப்பட்டது.

The post இயந்திரக் கோளாறு காரணமாக லட்சத்தீவில் கரை ஒதுங்கிய துத்துக்குடி மீன்பிடி படகு: 24 மணி நேரம் போராடி மீட்ட கடலோர காவல்படை appeared first on Dinakaran.

Tags : Tuthukudi ,Lakshadweep ,Coast Guard ,Tuticorin ,Dinakaran ,
× RELATED மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை