டெஹ்ரான்: ஈரானில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 9 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தூதர் தெரிவித்துள்ளார். ஈரான் – பாகிஸ்தானுக்கு இடையே சமீப நாட்களாக மோதல்கள் நீடித்து வரும் நிலையில், ஈரானுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது முடாசிர் திப்பு அளித்த ேபட்டியில், ‘ஈரானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பலுசெஸ்தான் மாகாணத்தின் சரவானில் கார் பழுது பார்க்கும் நிறுவனத்தில் பாகிஸ்தான் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 9 பேரை துப்பாக்கி ஏந்திய மூன்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மூன்று பேர் காயமடைந்தனர். பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம். ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். இச்சம்பவம் மிகவும் பயங்கரமான மற்றும் வெறுக்கத்தக்க சம்பவமாகும். இந்த சம்பவத்தை உடனடியாக விசாரித்து, இந்த கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்’ என்றார். ஈரானில் 9 பாகிஸ்தான் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
The post ஈரானில் 9 பாகிஸ்தான் தொழிலாளர்கள் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.