×

உடல் உறுப்பு தானம் பாராட்டுக்குரியது: வானொலியில் பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: உடல் உறுப்பு தானம் செய்வது பாராட்டுக்குரியது என்று தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாடினார். பிரதமர் மோடி இந்தாண்டின் முதல் ‘மனதின் குரல்’ வானொலி உரையில் பேசுகையில், ‘சமீபத்தில் பத்ம விருதுகள் பெற்ற ஒவ்வொரு இந்தியரும், தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறார்கள். இந்தியாவின் வளமான பாரம்பரியம், கலாசாரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற வெளிநாட்டினருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், தைவான், மெக்சிகோ, வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

பத்மஸ்ரீ விருதுக்கான தேர்வு முறை மாற்றப்பட்டுள்ளது. அதனால்தான் மற்ற ஆண்டுகளை விட இந்த முறை பத்ம விருது பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இம்முறை 13 பெண் வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் இலக்குகள் நிறைய உள்ளன. சிலர் ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கற்பித்து சிறந்த தலைமுறையை உருவாக்குகிறார்கள்.

ஆனால் சிலர் இறந்த பிறகும் உடல் உறுப்பு தானம் மூலம் தங்கள் பொறுப்புகளையும், கடமைகளையும் நிறைவேற்றி வருகின்றனர். மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற இதுபோன்ற செயல்களை செய்யும் அவர்களை பாராட்டுகிறோம். குடியரசு தின அணிவகுப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. பெண்களின் சக்தி அதிகம் பேசப்பட்டது. மகளிர் சுயஉதவி குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’ என்றார்.

The post உடல் உறுப்பு தானம் பாராட்டுக்குரியது: வானொலியில் பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,NEW DELHI ,PM ,MODI ,Indian ,Dinakaran ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...