×

41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 76 நாட்களுக்கு பின் மீண்டும் சுரங்கப்பணி தொடங்கியது: ஒன்றிய அமைச்சகம் அனுமதி

உத்தரகாசி: உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து நடந்து 76 நாட்களுக்கு பின் மீண்டும் சுரங்கப்பணி தொடக்கப்பட்டதாக ஒன்றிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்தாண்டு நவம்பர் 12ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அடுத்த சில்கரா பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் நடந்தது. அப்போது சுரங்கத்தில் பணியாற்றிய 41 தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். 17 நாட்கள் நீடித்த மீட்பு நடவடிக்கைக்கு பிறகு, அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 12ம் தேதி முதல் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சுரங்கப்பாதை திட்டத்தின்படி, இன்று 480 மீட்டர் தூரத்திற்கு இன்னும் சுரங்கப்பாதை தோண்டப்படவில்லை. பல நிபுணர்களின் பரிந்துரைகளைப் பெற்ற பின்னர், ஒன்றிய அரசு மீண்டும் சுரங்கப்பாதை பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் கஜா கம்பெனி அதிகாரிகள் கூறுகையில், ‘சில்கரா சுரங்கப்பாதையில் விபத்து நடந்து 76 நாட்களுக்குப் பிறகு கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, பார்கோட் பக்கத்திலிருந்து சில்கரா வரையிலான சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 15 நாட்களில், இந்த பணிகள் மேலும் துரிதப்படுத்தப்படும். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிக்கும், சில்கரா நுழைவாயிலுக்கும் இடையில் சுமார் 100 மீட்டர் தொலைவில் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன’ என்று கூறினர்.

The post 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 76 நாட்களுக்கு பின் மீண்டும் சுரங்கப்பணி தொடங்கியது: ஒன்றிய அமைச்சகம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Union Ministry ,Uttarakasi ,subway accident ,Silkara ,Uttarakasi, Uttarakhand ,Dinakaran ,
× RELATED சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை மாநில கல்லூரிக்கு 3வது இடம்