×

சென்னை மெட்ரோ இரயில் பணி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஒயிட்ஸ் சாலையில் செய்யப்பட உள்ள போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் பணி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஒயிட்ஸ் சாலையில் செய்யப்பட உள்ள போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில்:
சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் 28.01.2024 முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

* பட்டுலாஸ் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை x திரு வி க சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

* ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.

* அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

* அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை X திரு விகா சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும்.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

The post சென்னை மெட்ரோ இரயில் பணி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஒயிட்ஸ் சாலையில் செய்யப்பட உள்ள போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Whites Road ,Chennai Thousand Lights ,Chennai Metro Rail ,Chennai ,Chennai Metro Railway ,White Road ,Thousand Lampu ,Chennai Whites Road ,Chennai Metro ,Chennai Thousand Lamps ,Dinakaran ,
× RELATED 2026ம் ஆண்டில் ஒப்படைக்கும்படி ரூ.3,657...