×

30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றகோரி தொடக்க கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சிவகங்கை, ஜன. 28: சிவகங்கை அரண்மனைவாசல் முன் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். கடந்த அக்.12ல்-சென்னையில் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அன்பரசுபிரபாகரன், ஜான்பீட்டர், முத்துராமலிங்கம், மனோகரன், முத்துப்பாண்டியன், அழகப்பன், ராஜராஜன், அருள் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஜோசப்சேவியர் தொடங்கி வைத்தார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து பேசினார். மாவட்ட நிர்வாகிகள் ரெங்கராஜன், ராசா, சேசுராஜ், தாமஸ்அமலநாதன், டேவிட், பாண்டியராஜன், ராமகிருஷ்ணன் பேசினர். மாவட்ட நிதிக் காப்பாளர் சிங்கராயர் நன்றி கூறினார். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

The post 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றகோரி தொடக்க கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Palace ,Titojak ,Chennai ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்