×

வடமாநில தொழில்துறையினருக்கு சலுகைகள் செய்து கொடுக்கப்படும்: ராஜஸ்தான் எம்.பி. பேச்சு

 

திருப்பூர், ஜன. 28: வடமாநிலங்களை சேர்ந்த தொழில்துறையினருக்கு தேவையான சலுகைகள் செய்து கொடுக்கப்படும் என ராஜஸ்தான் எம்.பி. ராஜேந்திரகுமார் பேசினார். திருப்பூரில் பாஜ சார்பில் ராஜஸ்தானை சேர்ந்த தொழில்துறையினருடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. பாஜ மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கி பேசினார். தேசிய மொழி பிரிவு மாவட்ட தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். இதில் ராஜஸ்தான் மாநில ராஜ்யசபா எம்.பி. ராஜேந்திரகுமார் கலந்து கொண்டு பேசியதாவது: உலக அளவில் திருப்பூர் தனி அடையாளமாக இருந்து வருகிறது.

பனியன் தொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டி வருகிறது. வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பனியன் நிறுவன தொழிலை செய்து வருகிறீர்கள்.  இதுபோல் தொழிலாளர்களும் லட்சக்கணக்கானவர்கள் இங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். பனியன் தொழில் தொடர்பாக எந்த குறைகள் இருந்தாலும் தெரிவிக்கலாம். இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் தொழில்துறையினருக்கு தேவைப்படுகிற சலுகைகளை பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்று, கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வடமாநில தொழில்துறையினருக்கு சலுகைகள் செய்து கொடுக்கப்படும்: ராஜஸ்தான் எம்.பி. பேச்சு appeared first on Dinakaran.

Tags : northern ,Rajasthan ,Tirupur ,Rajasthan M.P. ,Rajendra Kumar ,BJP ,president ,Senthilvel ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 269 புள்ளிகள் சரிவு..!!