×

செம்பனார்கோயில் விவசாயிகளை தேடி சென்று ₹21.50 லட்சத்துக்கு நெல் கொள்முதல்

செம்பனார்கோயில்: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்றும் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று செம்பனார்கோயில் பகுதியில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று கண்காணிப்பாளர் சங்கர்ராஜா தலைமையில் விற்பனைகூட பொறுப்பாளர் சிலம்பரசன், முன்னிலையில் மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பாபு மேற்பார்வையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் சுமார் 1,140 குவிண்டால் உமா ரக நெல் 1,900 மூட்டைகள் ரூ.21.50 லட்சத்துக்கு கொள்முதல் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இதில் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.2,360-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,850-க்கும் சராசரியாக ரூ.2,100-க்கும், விலைபோனது. இதேபோல் விவசாயிகளின் இடத்திற்கே சென்று பரிவர்த்தனை செய்யப்படுவதால் போக்குவரத்து செலவு, ஏற்று கூலி, இறக்கு கூலி, கால விரயம் போன்ற செலவினங்கள் தவிர்க்கப்படுகிறது எனவும், மேலும் மின்னணு தேசிய வேளாண் திட்டத்தில் விற்பனை செய்யப்படுவதால் நல்ல விலையும், உடனடி பணமும் கிடைக்கிறது எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

The post செம்பனார்கோயில் விவசாயிகளை தேடி சென்று ₹21.50 லட்சத்துக்கு நெல் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Cempanarkoil ,CEMPANARCOIL ,MAYILADUDURA DISTRICT ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் வரலாறு காணாத அளவில் சுட்டெரிக்கும் வெயில்