×

ஜனநாயக மாண்பை, ஜனநாயக முறையில் மக்களும், ஆளும் கட்சிகளும் பின்பற்றினால் நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும்: மும்பை பேரவை தலைவர்கள் மாநாட்டில் அப்பாவு பேச்சு

சென்னை: ஜனநாயக மாண்பை, ஜனநாயக முறையில், நாட்டு மக்களும், ஆளும் கட்சிகளும் பின்பற்றினால் தான் நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும் என்று மும்பையில் நடந்த பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் தமிழ்நாடு பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார். பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று மும்பையில் நடந்த பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் பேசியதாவது: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட அமைப்புதான் குடியாட்சி முறை இந்திய ஜனநாயகம் ஆகும். கூட்டாட்சி முறை அமைப்பைக் கொண்டதுதான் நம்முடைய ஜனநாயக அமைப்பு. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என்பவை, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள், நிர்வாகத் துறை, நீதித் துறை மற்றும் பத்திரிகைத் துறை ஆகியவை. இந்த நான்கு தூண்களும் வெவ்வேறு அமைப்புகளாக இருந்தாலும், இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு நன்மைகள் ஏற்படும்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் கொண்டு வரப்படும் மசோதாக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் பிரதிநிதிகளால் முழுமையாக விவாதிக்க அனுமதிப்பது தான் ஜனநாயகத்தின் மாண்பு. மேலும், வினாக்கள்-விடைகள் நேரம், நேரமில்லா நேரத்தில் உறுப்பினர்களை முழுமையாக பேச அனுமதிக்க வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் மாண்பைக் கெடுக்கும் வகையில் சில நேரங்களில் சில மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைகள் இருக்கும் போது பேரவைத் தலைவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் “I will refer to IPC only as IPC even after it gets replaced with new law named in Hindi” என்று குறிப்பிட்டுள்ளார்.

2006-11ம் ஆண்டு தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த காலக்கட்டத்தின்போது, சட்டன்றத்தின் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம் அவையில் நடந்த ஒரு நிகழ்வுக்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் அவையிலிருந்து பேரவைத் தலைவர் வெளியேற்றி விடுவார். அவைக்கு வருகை தந்தவுடன் அதனை அறிந்த கலைஞர் அனைவரையும் மீண்டும் அவைக்கு அழைத்து வருமாறு தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து, மீண்டும் அவர்களை அவைக்கு அழைத்து வந்து அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளச் செய்தவர். இதுதான் ஜனநயாக மாண்பு.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை ஆற்ற வந்த ஆளுநர், உரையில் பல பகுதிகளைச் சேர்த்தும், நீக்கியும் வாசித்து தமிழக சட்டமன்ற மாண்பை இழிவுப்படுத்தியை நினைவுகூர விரும்புகிறேன். தற்போது, கேரள மாநிலத்தினுடைய ஆளுநர், உரையின் கடைசி பக்கத்தை மட்டும் அவையில் வாசித்து, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஜனநாயக மாண்பை, ஜனநாயக முறையில், நாட்டு மக்களும், ஆளும் கட்சிகளும் பின்பற்றினால் தான் நம்முடைய நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

The post ஜனநாயக மாண்பை, ஜனநாயக முறையில் மக்களும், ஆளும் கட்சிகளும் பின்பற்றினால் நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும்: மும்பை பேரவை தலைவர்கள் மாநாட்டில் அப்பாவு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Mumbai Assembly Leaders' Conference ,CHENNAI ,Tamil Nadu Assembly ,President ,Appavu ,leaders' ,Mumbai ,Assembly ,Mumbai Assembly Presidents Conference ,Dinakaran ,
× RELATED அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு...