×

காற்றோட்டம், தண்ணீர் இன்றி தவிப்பு விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கையில் நடந்த பயணி: சக பயணிகள் ஆதரவு

மெக்சிகோ: சக பயணிகளின் உயிரை காப்பாற்ற விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கையில் நடந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏரோமெக்சிகோ நிறுவனத்துக்கு சொந்தமான ஏஎம்672 பயணிகள் விமானம் நேற்று முன்தினம் காலை 8.45 மணிக்கு கவுத்தமாலா புறப்பட தயாராக இருந்தது. ஆனால் பராமரிப்பு பணி காரணமாக விமானம் புறப்படுவது காலதாமதமானது. அப்போது விமானத்தில் போதிய காற்றோட்டம் இல்லை. அவர்களுக்கு குடிக்க தண்ணீரும் தரப்படாததால் விமான பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்த சமயத்தில் பயணி ஒருவர் விமானத்தின் அவசரகால கதவை திறந்து கொண்டு இறக்கையில் ஒய்யாரமாக நடந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த நபர் சக பயணிகளின் உயிரை காப்பாற்றவே அவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சக பயணிகள் 77 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இருப்பினும் விமான பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய அந்த நபரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

The post காற்றோட்டம், தண்ணீர் இன்றி தவிப்பு விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கையில் நடந்த பயணி: சக பயணிகள் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Mexico ,Aeromexico ,Mexico City International Airport ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...