×

பள்ளிவாசல் திறப்புவிழாவில் இந்து பெண்கள் சீர்வரிசை

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் குருந்தம்பட்டு கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான ரஹ்மத் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசல் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, கல்லல் ஆகிய பகுதிகளில் இருந்து இந்து பெண்கள் சீர்வரிசைகளை எடுத்து வந்தனர். புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கேஎன்.பாஷா திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘இப்பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் சீர்வரிசை எடுத்துவந்து பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்றது மறக்கமுடியாத நிகழ்வு. இந்தியா பல்வேறு மதங்கள், பல்வேறு கலாசாரங்கள் இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு’’ என்றார்.

 

The post பள்ளிவாசல் திறப்புவிழாவில் இந்து பெண்கள் சீர்வரிசை appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Rahmat Jumma ,Kallal Kurundampattu ,Karaikudi, Sivagangai district ,Alampattu ,Kurundhampattu ,Kallal ,
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!